The World's Most Advanced
Prediction Enabled
Astrology Software
Get your free, detailed natal chart and yogas activated for you.
Plus, ask questions and get guidance from our expert astrologers.

முன்னுரை
உலகத் தமிழர்களுக்கு 'கலெக்டிவா நாலெஜ் அகாடமி'யின் அன்பு வணக்கங்கள். ஜோதிடம் இந்தியாவில் தொன்று தொட்டு வழக்கில் இருந்து நம்மை வழிநடத்தி வரும் உன்னத கலையாகும். எப்பொழுது எல்லாம் நமக்கு ஒரு முடிவு எடுக்க தடுமாற்றம் வருகிறதோ அப்போதெல்லாம் நமக்கு ஜோதிடம் ஒரு வழிகாட்டியாக திகழ்கின்றது. அத்தகைய உயர்வு மிக்க ஜோதிடத்தினை அனைவருக்கும் எடுத்து செல்வது மற்றும் ஜோதிடத்தினை செம்மை படுத்துவது ஆகியவை எங்களின் நோக்கமாகும்.
எங்களின் குறிக்கோள்கள்
- சித்தர்களின் மூலமாக தமிழகத்தில் ஆராய்ந்து மேன்மை பெற்ற ஜோதிடத்தை, அறிவியல் பூர்வமான முறையில் இன்றைய படித்த இளைஞர்களிடம் எடுத்து செல்வது...
- பிறந்த இடம், நாள் மற்றும் நேரத்தைக் கொண்டு கணினியின் உதவியுடன் துல்லியமாக ஜாதகத்தைக் கணிக்க பொதுமக்கள் அனைவருக்கும் உதவுவது.
- எங்களால் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு ஒரு சிறந்த ஜோதிடம் கணிக்கும் மென்பொருளை உருவாக்கி அதன்மூலம் பொதுமக்களை செம்மையாக வழிநடத்துவது.
- எங்களால் பயிற்சி பெற்றவர்கள் அல்லாமல், தமிழகத்தில் உள்ள நேர்மையான திறமையான ஜோதிடர்களை உலகிற்கு அறிமுகம் செய்வது.
இலவச வீடியோ பாடங்கள்
சமீப காலமாக ஜோதிடம் என்னும் மேன்மையான இப்பாடத்தைப் பற்றிய எந்த வித அறிமுகமும் இல்லாமல் இன்றைய இளைஞர்களின் கல்விக் கட்டமைப்பு இருப்பதால், இதனைப் பயன்படுத்தி பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஜோதிடத்தைப் பற்றி தவறான கருத்துக்களை பல்வேறு ஊடகங்களின் வாயிலாக சொல்லி வருகின்றனர்.
அந்த அனைத்துக் கேள்விகளுக்கும் எங்களின் அறிமுக வீடியோக்கள் விளக்கம் அளிக்கின்றது. கீழ்காணும் 'Youtube'வீடியோக்களைப் பாருங்கள்.
ஜோதிடத் தொழில் பழகு
- எங்களின் ஜோதிடத் தொழில் பழகு என்னும் பயிற்சியின் மூலம் ஒவ்வொரு தமிழனும் வீட்டிலிருந்தபடியே தங்களின் ஓய்வு நேரத்தில் இந்த உன்னத கலையைக் கற்றுக் கொண்டு செம்மையான சுயதொழில் செய்பவராக ஆகலாம்.
- எங்களின் கணிப்புப்படி எதிர்காலத்தில் ஜோதிடமும், மன உளவியலும் போட்டி போட்டுக்கொண்டு மக்களிடம் செல்லும்...
- நாங்கள் ஜோதிடப் பாடத்திட்டத்துடன் தொழில், பணம் பராமரிப்பு, ஆன்மிகம் மற்றும் உடல் மனம் சார்ந்த பயிற்சிகளையும் சேர்த்து வழங்குகிறோம். இது மக்களை சரியான திசையில் வழி நடத்த மிகவும் உதவுகிறது.
தோஷங்களும் பரிகாரங்களும்
- தோஷங்கள் என்பது, நம் உடல் கிரகிக்கும் ஒளி அல்லது ஒளி பற்றாக்குறையே ஆகும். அதிக ஒளி, உடலுக்கு ஒவ்வாத ஒளி, பற்றாக்குறையான ஒளி, உடலுக்கு ஒவ்வாத ஒளிகளின் சேர்க்கை ஆகியவை நம் சிந்திக்கும், உடல் ஒத்துழைக்கும் ஆற்றலை விரைவு படுத்துவது அல்லது மந்தமாக செயல்பட வைப்பது என்ற செயல்களின் மூலம் ஒருவருக்கு கெடுதலான விஷயங்கள் நடப்பது ஆகும்.
- பரிகாரங்கள் என்பது அக்காலத்தில் சித்தர்களும் யோகிகளும் தங்களின் தவ வலிமையின் மூலமாக ஒருவருக்கு நன்மை செய்து விட்டு, அதே சமயம் தங்களால்தான் நல்லது நடந்தது என்று யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக, சில கோவில்களை தரிசிக்க, மற்றும் சில பூஜைகளை செய்ய பரிந்துரை செய்தனர்.
- தொலைதூரப் பயணம் மனிதனின் மனதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும். கூட்டு பிரார்த்தனை ஒருவருக்கு நம்பிக்கை ஊட்டும். மொத்தத்தில் மனிதனின் மன மாற்றமே அவனின் எல்லா உயர்வுக்கும் வழிகாட்டியாக அமையும்.
Frequently Asked Questions
தற்காலத்தில், பரிகாரம் என்ற பெயரில் பணம் சம்பாதிக்கும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. எங்களின் பயிற்சி முறையில் பரிகாரம் என்பதை நாங்கள் யாருக்கும் பரிந்துரை செய்வதில்லை. அதற்கு பதிலாக,
- வாழ்நாள் முழுவதும் மூச்சு பயிற்சி செய்யுங்கள்.
- அதிகாலை எழுந்து (4 AM to 6 AM) 21 நிமிடம் கிழக்கு நோக்கி அமர்ந்து உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்.
- மிகவும் குழப்பமான நிலையில் இருக்கும் போது ஜோதிடத்தை உபயோகப்படுத்தி உங்கள் கேள்விகளுக்கு விடைகாணுங்கள்.
- முடிந்தவரை எளிமையான வாழ்வு வாழ பழகுங்கள்.
- இதையும் மீறி வரும் துன்பங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஜோதிடம் என்பது ஒளி விஞ்ஞானம் ஆகும். இருளும் ஒளியும் ஜோதிடத்தின் இரு கண்கள். இரண்டையும் ஒருவர் முழுமையாக அறிந்துகொள்ளாமல் ஜோதிடத்தை முழுமையாக அறிவது மிகவும் கடினம். நமது அறிமுக விடியோக்கள் மூலம் நீங்கள் இந்த ஒளி விஞ்ஞானத்தை எளிமையாக கற்க முடியும்.
ஜோதிடத்தின் அடிப்படைகள் கற்றுவைதிருப்பது அனைவருக்கும் அவசியம். ஆனால் அதில் அனைவரும் நிபுணத்துவம் பெற்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
நமது முறையானது பாரம்பரிய ஜோதிட முறையை விஞ்ஞான ரீதியில் அனைவருக்கும் புரியும்படி தாய்மொழியில் எளிமையாக வழங்குவதாகும். இதன்மூலம் நமக்கு ஆழ்ந்த தெளிவு கிடைக்கும்.
ஜோதிடம் ஒரு மனிதனின் இயல்பில் ஏற்படும் மாற்றத்தை சுட்டிக்காட்டும் ஒரு கருவியாகும். இந்த கருவியின் உதவியை நமது சுய சிந்தனை மூலம் ஆராய்ந்து பயன்படுத்தினால் நமது வாழ்வு மிக எளிமையாக மாறும். இந்த உதவியை ஜோதிடம் மிக அற்புதமாக செய்கிறது.